செய்திகள்

தேர்தல் ஆணையத்தில் சிவி சண்முகம் மனு - கேசி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை

Published On 2018-10-10 08:02 GMT   |   Update On 2018-10-10 08:02 GMT
அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். #ADMK #CVShanmugam #KCPalanisamy
புதுடெல்லி:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு இணைந்தது. அப்போது, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

இந்த திருத்தத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி முடிவெடுக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கே.சி.பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்பதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  #ADMK #CVShanmugam #KCPalanisamy

Tags:    

Similar News