செய்திகள்

20 ரூபாய்க்கு மாற்று ரேசன் கார்டு வழங்கப்படும்- உணவு வழங்கல் அதிகாரி தகவல்

Published On 2018-10-10 10:12 IST   |   Update On 2018-10-10 10:12:00 IST
ரேசன்கார்டில் திருத்தங்கள் செய்தால் 20 ரூபாய்க்கு மாற்று ரேசன் கார்டு வழங்கப்படும் என்று உணவு வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார். #RationCard
சென்னை:

தமிழ்நாட்டில் 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் ரேசன் கார்டுகள்’ வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண் விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

ரேசன் கார்டில் குடும்ப தலைவர், மகன், மகள் பெயர்களில் பிழைகளை திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் செய்யவும் பொது வினியோக திட்ட இணையதளத்தில் பலர் திருத்தம் செய்து வருகின்றனர்.


இந்த கார்டுகளை நகல் எடுப்பதற்கு அரசு இ-சேவை மையங்களில் மாற்று ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சேவை மைய ஊழியர்கள் மாற்று கார்டு வழங்க அதிக பணம் வசூலித்ததால் கார்டு வழங்குவதை சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி விட்டனர்.

தற்போது மாற்று கார்டுகள் கேட்டு ஏராளமானோர் உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கும், வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கும் சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால் 20 ரூபாய்க்கு மாற்று ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடு நடந்து வருவதாக உணவு வழங்கல் துறை அதிகாரி தெரிவித்தார். #RationCard
Tags:    

Similar News