செய்திகள்

பூந்தமல்லி நகராட்சி பகுதியில் திருவள்ளூர் கலெக்டர் வீடு, வீடாக ஆய்வு

Published On 2018-10-09 10:39 GMT   |   Update On 2018-10-09 10:39 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

பூந்தமல்லி:

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இதற்காக 1300 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி திடீரென பூந்தமல்லி நகராட்சி பகுதியில் ஆய்வு செய்ய வந்தார். அவர் பஸ் நிலையம், குடிநீர் வழங்கும் தொட்டிகளை பார்வையிட்டார்.

பின்னர் சந்தியாநகர் பகுதிக்கு சென்ற கலெக்டர் வீடு, வீடாக சென்று சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வீட்டு முன்பு குப்பைகள் தேங்கக்கூடாது. சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை பரிசோதித்தார். சுகாதார பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கண்டிப்பாக கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்று கலெக்டர் மகேஸ்வரி உத்தரவிட்டார். இந்த ஆய்வு பணி 8 மணி வரை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

அப்போது, துணை இயக்குனர்கள் கிருஷ்ண ராஜ், பிரபாகர், நகராட்சி கமி‌ஷனர் டிட்டோ, தாசில்தார் புனிதவதி, நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News