செய்திகள்

ஓட்டையை சரி செய்யாததால் பஸ்சுக்குள் ‘குடை’ பிடித்த டிரைவர்

Published On 2018-10-08 09:45 GMT   |   Update On 2018-10-08 09:45 GMT
திருவான்மியூர் அரசு பஸ் டிரைவரும், கண்டக்டரும் தங்கள் இருக்கைக்கு மேல் பகுதியில் குடை வைத்த படி வேலை பார்பதை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
குடையை பிடித்தபடி ஓட்டினாலாவது ஓட்டையை சரி செய்றாங்களா... பார்ப்போம்...!

இப்படி ஒரு எண்ணம் மாநகர அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவரான ஜானகி ராமனுக்கும், நடத்துனர் சம்சுதீனுக்கும்.

அரசு பஸ் என்றாலே பராமரிப்பு இல்லாமல் ஓட்டை, உடைசலாகவும் குப்பை கூழங்களுடனும் தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

மழைக்காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. பஸ் முழுவதும் ஒழுகும். இருக்கையில் அமர முடியாது. ஜன்னல்களை பூட்ட முடியாதபடி சிக்கி இருக்கும்.

டிரைவர் ஜானகிராமன் ஓட்டிய திருவான்மியூர் பஸ்சும் இதே ரகம்தான். டிரைவர், கண்டக்டர் இருக்கையிலும் ஒழுகி இருக்கிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது அவருக்குள் தோன்றியது தான் இந்த எண்ணம்.

டிரைவரும், கண்டக்டரும் தங்கள் இருக்கைக்கு மேல் பகுதியில் குடையை விரித்து கட்டி வைத்திருந்தனர். அந்த குடைக்குள் அமர்ந்த படியே வேலை பார்த்தனர்.

பஸ் ஏற சென்ற பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் நேரடியாகவே கேட்பார்கள். அப்போது தான் அவர்கள் விவரத்தை கூறினார்கள்.

நாள் ஒன்றுக்கு பஸ் பராமரிப்புக்கு ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை செலவிடுவதாக கணக்கு சொல்கிறது. ஆனாலும் பராமரிப்பு....?

புது பஸ்கள் வந்தால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் புது பஸ்கள் வாங்கினாலும் ஓரிரு நாட்கள் சுத்தம் செய்யப்படும். அதன் பிறகு அந்த பஸ்களும் பராமரிப்பு இல்லாத இந்த நிலைக்கு ஆளாகிவிடுமே. அதன் பிறகும் இதே நிலைக்கு தானே வரும். #TNGovernment
Tags:    

Similar News