திருப்பரங்குன்றம் தேர்தல் தள்ளிவைப்பு: மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு - உதயகுமார்
மதுரை:
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
எனவே மழை நேரத்தில் அரசு எந்திரங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது. அதை கருத்தில் கொண்டுதான் மழை நேரத்தில் தேர்தல் வேண் டாம் என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.
எனவே மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தள்ளிவைப்புக்கு பலர் பல காரணங்களை திரித்து கூறுவார்கள். அதையெல்லாம் கருத்தில் கொண்டால் மக்கள் நலன் காக்க முடியாமல போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார். #ElectionCommission #MinsiterUdhayaKumar