செய்திகள்

கனமழை எச்சரிக்கை - புதுச்சேரி, நீலகிரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Published On 2018-10-05 22:47 IST   |   Update On 2018-10-05 22:54:00 IST
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, நீலகிரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். #TNRain #SchoolClose
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக 7-ந் தேதி மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை  அளிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (6/10/2018) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதேபோல, நீலகிரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News