செய்திகள்

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அதிமுக அரசு அனுமதி அளிக்காது- தம்பிதுரை பேட்டி

Published On 2018-10-03 20:41 IST   |   Update On 2018-10-03 20:41:00 IST
தமிழகத்தை பொறுத்தமட்டில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #tngovt ##methaneproject
கரூர்:

கரூர் மாவட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மக்களிடம் நேரில் சென்று குறைகள் கேட்டு மனுக்கள் பெற்று வருகின்றனர். இன்று கரூர் மூக்கினாங்குறிச்சி பகுதியில் மனுக்கள் பெற்ற போது மு.தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்வது அவர்களாக இருந்தாலும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டியது தமிழக அரசு தான். தமிழகத்தை பொறுத்தமட்டில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் கவர்னர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்றார். 

2016 சட்டமன்ற தேர்தலின் போது அரவக்குறிச்சியில் தேர்தலை நிறுத்த நீங்கள் (மு.தம்பித்துரை) தான் காரணம் என முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளாரே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தேர்தல் கமிஷன் எனக்கு தனி அதிகாரம் எதுவும் அளிக்கவில்லை. ஒருவேளை அப்படி இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த தேர்தலை பொறுத்தவரை தேர்தல் கமிஷன்தான் தேர்தலை நிறுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #tngovt ##methaneproject
Tags:    

Similar News