செய்திகள்

குழந்தையை என்னிடம் இருந்து பிரித்ததால் உயிரை விடுகிறேன்- மனைவி உருக்கமான கடிதம்

Published On 2018-10-01 13:05 IST   |   Update On 2018-10-01 18:15:00 IST
குழந்தையை தன்னிடம் இருந்து பிரித்து கள்ளக்காதலியிடம் சேர்க்க முயன்றதால் தற்கொலை முடிவை எடுத்ததாக தற்கொலைக்கு முன் புஷ்பலதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். #AdulteryVerdict #Section497
சென்னை:

புஷ்பலதா, தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளது. இதனால் அவர் காலையில் வெளியில் செல்லும் போது எங்களது 1½ வயது பெண் குழந்தையை வெளியில் அழைத்து சென்று காதலியிடம் கொடுத்து விடுகிறார். மாலையில் வீடு திரும்பும் போது அழைத்து வருகிறார்.

இதனால் நான் தனிமையில் இருந்தேன். குழந்தையை பார்க்க விடாமல் கணவர் தடுக்கிறார். இது எனக்கு வேதனையை தருகிறது.

குழந்தையை பறிக்கும் கணவர், என்னிடமும் பிரியமாக இல்லை. எனவே நான் உயிரை விடுகிறேன். என்சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் மரணத்துக்கு பின்னர் கணவர் சந்தோ‌ஷமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் எழுதப்பட்டு இருந்தது.


இதற்கிடையே புஷ்பலதாவின் பெற்றோர் செல்வம்- சரசம்மாள் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், மகளின் கணவர் ஜான்பால் பிராங்கிளினுக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் 4 ஆண்டுக்கு முன்பே பழக்கம் இருந்தது. இதனை மறைத்து எனது மகளை ஏமாற்றி காதலித்து திருமணம் செய்து உள்ளார். பலமுறை எனது மகளை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.

என் மகளின் சாவுக்கு கணவர் ஜான்பால் பிராங்கிளினே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. #AdulteryVerdict #Section497 

Tags:    

Similar News