செய்திகள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-09-30 05:40 GMT   |   Update On 2018-09-30 05:40 GMT
சென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. #ChennaiHC
சென்னை:

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா இன்று மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கென மிகப்பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  #ChennaiHC
Tags:    

Similar News