செய்திகள்

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-09-29 23:27 IST   |   Update On 2018-09-29 23:27:00 IST
நெய்வேலியில் தாய் கண்டித்ததால் நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி:

நெய்வேலி வட்டம் 29-ஐ சேர்ந்தவர் ஜஸ்டஸ். இவரது மகன் மிதுன்சர்மா (வயது 19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மிதுன்சர்மா பெற்றோர் அனுமதி இன்றி சொந்த ஊருக்கு வந்ததாக தெரிகிறது.

இதனால் அவரது தாய், ஏன் சரியாக படிக்காமல் ஊருக்கு வந்தாய் என்று கூறி மிதுன்சர்மாவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மிதுன்சர்மா நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிதுன்சர்மாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட மிதுன்சர்மாவின் உடலை பார்வையிட்டு உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜஸ்டஸ் தெர்மல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News