செய்திகள்
மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் இறந்தார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே பருத்திவிளையை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 49), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர், அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுதர்சனை தேடி குளத்துக்கு சென்றனர். அப்போது, அவர் அணிந்திருந்த ஆடைகள் குளத்தின் கரையில் இருந்தது. ஆனால் சுதர்சனை காணவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்தின் உள்ளே இறங்கி சுதர்சனை தேடினர். அப்போது, சேற்றில் புதைந்த நிலையில், சுதர்சனின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. குளத்தில் குளிக்க இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் இறந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சுதர்சனுக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.