செய்திகள்

ராயபுரத்தில் மின்கம்பியில் தவறிவிழுந்து தொழிலாளி பலி

Published On 2018-09-28 15:17 IST   |   Update On 2018-09-28 15:17:00 IST
ராயபுரத்தில் ரெயில்வே நடைபாதை பணியின்போது உயர் அழுத்த மின்கம்பி மீது தவறிவிழுந்த தொழிலாளி கருகி இறந்தார்.
ராயபுரம்:

தர்மபுரி மாவட்டம் பயர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (27). இவர் சென்னையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார். தற்போது சென்னை துறைமுகம் 5-வது வாயிலில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால நடைபாதை பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று இரவு மற்ற தொழிலாளர்களுடன் குமரேசனும் வேலை செய்து கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.

இதில், நடை மேம்பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த ரெயில்வே மின்சார கம்பியில் விழுந்தார். இதனால் குமரேசன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார்.

இதை கண்ட மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News