செய்திகள்

விருத்தாசலத்தில் அஞ்சலக ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published On 2018-09-26 14:12 GMT   |   Update On 2018-09-26 14:12 GMT
விருத்தாசலம் தலைமை தபால் அஞ்சலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் தலைமை தபால் அஞ்சலகம் முன்பு அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கமேலேஷ்சந்திராவின் சாதகமான பரிந்துரைகள் அனைத்தையும் 01.01.2016 முதல் அடுல்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் நிலுவை தொகைகளை வழங்கிட வேண்டும். பணிக் கொடை அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும். குருப் இன்சூரன்ஸ் திட்டத்துக்கு ஊழியர்களின் பங்காக மாதம் ரூபாய் 500 வீதம் பிடித்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும். 

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம் அமுல்படுத்த வேண்டும். ஊழியர்களுக்கு 12, 24, 36 என்ற அடிப்படையில் வெயிட்டேஸ் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

இந்த போராட்டத்தில் கோட்ட தலைவர் ராமசாமி, கோட்ட பொருளாளர் வைரக்கண்ணு, கோட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், சண்முகம் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News