செய்திகள்

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 5 பேரை காப்பாற்றிய பெண் போலீஸ்

Published On 2018-09-26 09:37 GMT   |   Update On 2018-09-26 09:37 GMT
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரின் உயிரை காப்பாற்றிய பெண் போலீசுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை:

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கிழக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கோமதி என்ற பெண் போலீஸ் நேற்று பணியில் இருந்தார்.

அப்போது எண்ணூரை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளோடு அங்கு வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றியதுடன் மனைவி, குழந்தைகள் உடலிலுல் ஊற்றினார். பின்னர் திடீரென தீப்பெட்டியை எடுத்து தீயை பற்ற வைத்து தீக்குளிக்க முயன்றார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கோமதி பாய்ந்து சென்று தீப்பெட்டியையும், மண்எண்ணை கேனையும் பறித்தார். இதனால் ஒரே குடும்பத்தில் 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெண் போலீஸ் கோமதியை அழைத்து உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். குறித்த நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்ட கோமதி நேற்று மதியம் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அவரை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர். #tamilnews
Tags:    

Similar News