செய்திகள்

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள்

Published On 2018-09-25 12:20 GMT   |   Update On 2018-09-25 12:20 GMT
நாகையில் மாற்றுத் திறனாளிகள் 14 பேருக்கு தலா ரூ.4170 வீதம் ரூ.58,380 மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் 12 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 194 என மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் 1 பயனாளிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான விபத்து நிவாரணத் தொகை காசோலை, சமூகப்பாதுகாப்புத் திட்டம் சார்பில் 1 பயனாளிக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி உதவித் தொகைக்கான ஆணை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பேருக்கு தலா ரூ.4170 வீதம் ரூ.58,380 மதிப்பிலான விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் விக்டர் மரிய ஜோசப், உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News