செய்திகள்

8 பிரிவுகளில் வழக்குப்பதிவு - தலைமறைவாகவில்லை என கருணாஸ் தகவல்

Published On 2018-09-21 04:15 GMT   |   Update On 2018-09-21 04:37 GMT
சர்ச்சை பேச்சு தொடர்பாக 8 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தான் தலைமறைவாக வில்லை என கருணாஸ் தெரிவித்துள்ளார். #Karunas
சென்னை:

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார். 

மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தான் தலைமறைவாக இல்லை வீட்டில் தான் இருக்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார்.
Tags:    

Similar News