செய்திகள்

பெரியாறு பாசன கால்வாயில் தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலி

Published On 2018-09-20 21:44 IST   |   Update On 2018-09-20 21:44:00 IST
வாடிப்பட்டியில் பெரியாறு பாசன கால்வாயில் தவறி விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலியானார்.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி ஊராட்சி சின்னமநாயக்கன்பட்டி பெரியாறு பாசன கால்வாயில் ஆண் பிணம் மிதப்பதாக கிராம நிர்வாக அதிகாரி ஜெயராஜ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்தவர் மதுரை அருகே கீழ் மதுரை சின்னக்கண்மாய் தெற்கு தெருவை சேர்ந்த மாறன் (வயது 53) என்றும் இவர் வாடிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு சுகுணாசுந்தரி (45)என்ற மனைவியும், 3 மகன், ஒரு மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News