செய்திகள்

அரக்கோணத்தில் 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

Published On 2018-09-14 15:50 IST   |   Update On 2018-09-14 15:50:00 IST
அரக்கோணத்தில் 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். ரெயில்வே ஊழியர். இவருடைய மகன் கீர்த்திவாசன் (வயது 14). 9-ம் வகுப்பு மாணவன். விநாயகர் சதுர்த்தியையொட்டி விடுமுறை என்பதால் நேற்று வீட்டில் இருந்த கீர்த்திவாசன் மாலையில் நண்பர்களுடன் சேர்ந்து பக்கத்து கிராமமான பெருமுச்சியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

கிணற்றில் படிக்கட்டை பிடித்தபடி ஓரமாக குளித்துக் கொண்டிருந்த கீர்த்திவாசன் திடீரென நீரில் மூழ்கினார். நண்பர்கள் மீட்க முயன்றும், அவரை காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்ததும், அரக்கோணம் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவனை பிணமாக மீட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக உடல் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News