செய்திகள்

தற்கொலையை தடுக்க உளவியல் ஆலோசனை சேவை - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Published On 2018-09-11 09:57 GMT   |   Update On 2018-09-11 09:57 GMT
வளரிளம் பருவத்தினர் மனநலனை பாதுகாக்கும் வகையில் கட்டணமில்லா உளவியல் ஆலோசனை சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை:

கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பின்னர் அரசு மனநல காப்பகத்தில் தற்கொலை தடுப்பு காப்பாளர் பயிற்சியை தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டினை வெளியிட்டு உளவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி ஆணையை வழங்கினார்.

பின்னர் பட்டிமன்றம், ரங்கோலி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கி பேசுகையில், ‘‘தமிழகத்தின் வருங்கால சந்ததியினர் மற்றும் வளரிளம் பருவத்தினர் மனநலனை பாதுகாக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களில் தமிழக அரசு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கட்டணமில்லா உளவியல் ஆலோசனை சேவைகள், மற்றும் மருத்துவ சேவைகள் 104 தொலைபேசி மூலம் வழங்கப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News