செய்திகள்
கோப்புப்படம்

ஜெயலலிதா மரண விசாரணை- முன்னாள் கவர்னரின் செயலாளர் ஆஜர்

Published On 2018-09-11 07:34 GMT   |   Update On 2018-09-11 07:34 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாளர் கவர்னர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா இன்று ஆஜரானார். #JayaDeathProbe
சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

சசிகலா உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகிறார்.

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும் சிகிச்சை குறித்தும் டாக்டரிடம் கேட்டார்.

இந்த நிலையில் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனாவுக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையேற்று ரமேஷ்சந்த் மீனா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர்ஆனார்.

அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வித்யாசாகர் ராவ் நேரில் பார்த்தாரா, என்பது போன்ற கேள்விகளை கேட்டார். இதேபோல் அப்பல்லோ டாக்டர் ராஜ்பிரசன்னா ஆஜரானார். #JayaDeathProbe #Jayalalithaa #JusticeArumugaswamy
Tags:    

Similar News