செய்திகள்
கோப்புப்படம்

தேனி- திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடியது

Published On 2018-09-10 10:46 GMT   |   Update On 2018-09-10 10:46 GMT
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. #PetrolPriceHike
திண்டுக்கல்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் இந்த போராட்டத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

திண்டுக்கல்லில் இன்று காலை முதலே பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் இயல்பான நிலை காணப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது.

பஸ் நிலையத்தில் பெரிய ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு ஓட்டல்கள் மற்றும் டீ கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. கடை வீதி, மெயின்ரோடு, நாகல்நகர், பழனிரோடு, காட்டாஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.

அரசியல் கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் வழங்கி கடைகளை அடைக்க வலியுறுத்தி இருந்தனர். இருந்தபோதும் இயல்பு நிலை பாதிக்கப்படவில்லை.

பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டதால் குறைந்த அளவு ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பழனி, கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

திண்டுக்கல், தேனி, மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 950-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் காலையிலேயே டெப்போவில் இருந்து கிளம்பியது.

தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கம்பம் நகரில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேனி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வாகனங்கள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு செல்கிறது. கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்களும் கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

கேரளாவிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கேரளாவில் இருந்து எந்த வாகனங்களும் தமிழக எல்லைக்குள் வரவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. #PetrolPriceHike
Tags:    

Similar News