செய்திகள்
சாத்தான்குளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சாத்தான்குளம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் ஜேக்கப் (வயது56), விவசாயி. இவர் விஷம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு ஏசுதாஸ் ஜேக்கப் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.