செய்திகள்

குட்கா ஊழல் விவகாரம் - முதல்வருடன் அமைச்சர் விஜய பாஸ்கர் திடீர் சந்திப்பு

Published On 2018-09-07 10:25 GMT   |   Update On 2018-09-07 10:25 GMT
குட்கா ஊழல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். #GutkhaScam #CBIRaid #VijayaBaskhar
சென்னை:

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு இன்று வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் விஜய பாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

இதற்கிடையே, குட்கா ரெய்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ், குட்கா விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது எனவும், தன்னை சிக்கவைக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
Tags:    

Similar News