செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் உயர்வு

Published On 2018-09-07 09:17 GMT   |   Update On 2018-09-07 09:17 GMT
அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி வர உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் ‘பூக்கள்’ விலை திடீரென உயர்ந்துள்ளது. #KoyambeduMarket
சென்னை:

கோயம்பேடு மார்க் கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை அதிகமாகி விட்டது.

சாமந்தி பூ 1 கிலோ 80 ரூபாயில் இருந்து ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. மல்லிகை பூ 300 கிராம் ரூ.200-க்கு உயர்ந்துவிட்டது.

40 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ ரோஜா இப்போது 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பன்னீர்ரோஜா கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முல்லை 300 கிராம் ரூ.120 ஆக உயர்ந்துவிட்டது. கனகாம்பரம் 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

செண்டு பூ 1 கிலோ ரூ.20 -க்கும் டேரி பூ 1 கிலோ ரூ.60-க்கும் விலை உயர்ந்துள்ளது. பூக்கள் விலை அடுத்த வாரம் மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி பூ மார்க்கெட் வியாபாரி பி.கே.கே.வேலு கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து அதிக அளவில் ‘பூக்கள்’ வருவது வழக்கம். இதில் சனி, ஞாயிறு நாட்களில் பூக்கள் வரத்து குறைவாக இருக்கும்.

அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் வருவதை யொட்டி மொத்த வியாபாரிகள் இப்போதே பூக்கள் பறிப்பதை குறைத்து விலையை அதிகமாக்கி வருகின்றனர்.

இதனால் அடுத்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து பூக்கள் விலை மேலும் உயரும். 15-ந்தேதிக்கு பிறகு தான் பூக்கள் விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார். #KoyambeduMarket

Tags:    

Similar News