செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்- டி.டி.வி. தினகரன் பேட்டி

Published On 2018-08-31 11:50 GMT   |   Update On 2018-08-31 11:50 GMT
அ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். #ttvdinakaran #tngovt

களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ.பி.எஸ் யார்? அவர் 2001-ல் யாரால் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சரானார்?. 2001 செப்டம்பரில் யாரால் முதல்வர் ஆனார் என்பது பெரியகுளம், தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றாக தெரியும். அவர் தம்பி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உள்ளார். இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் கட்சியில் நீக்கம் செய்யப்பட்டவர்கள். இவர்களது சதியால் எங்களையும் ஜெயலலிதா ஒதுங்கி இருக்க சொன்னார். அப்போது நாங்கள் ஜெயலலிதாவிற்கு எதிராக எந்த வார்த்தையும் சொல்லவில்லை.

ஓ.பி.எஸ். அவரது குடும்பத்தை கட்சியில் புகுத்தவே, ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்க மாட்டோம் என்று கூறுகிறார். அவர் யாருடைய ஏஜெண்டாக உள்ளார் என்பதும் மக்களுக்கும் தெரியும். அவர் சொல்வதை மக்கள் புறக்கணிப்பார்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே துரோகத்தின் மொத்த உருவம்.


இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதன் பின் ஓ.பி.எஸ் தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் உடல்நிலை நன்றாக உள்ளது.

நான் கடந்த 18-ந் தேதி நேரில் சந்தித்தேன். நன்றாக இருந்தார். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்போம். பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. கூட்டணி வெற்றி பெறும். வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதி எங்கள் பக்கம் உள்ளது. எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #tngovt

Tags:    

Similar News