செய்திகள்

விநாயகர் சிலை வைப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் - இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு

Published On 2018-08-27 12:10 GMT   |   Update On 2018-08-27 12:10 GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
சேலம்:

இந்து முன்னணி மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமையில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக மனு கொடுப்பதற்காக இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் அனைவரையும் அலுவலகத்திற்குள் விட மறுத்தனர். 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறியதால் 5 பேர் மட்டும் சென்று கலெக்ரிடம் மனு கொடுத்தனர்.

இந்து முன்னணி சார்பில் சேலம் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த வருடம் அரசு ஆணை மூலம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்துக்களின் மத வழிபாட்டு உரிமையை மறுப்பது போல் உள்ளது.

தற்போது காவல்துறை சில இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுத்துள்ளனர். அந்த இடங்களில் சிலை வைக்க கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ.விடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

அந்த இடங்களில் சிலை வைக்க அனுமதியும் புதிய கட்டுப்பாடுகளை அகற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News