செய்திகள்

முக்கொம்பு அணை உடைந்து விழுந்தது ஏன்? - தினகரன் பேட்டி

Published On 2018-08-26 06:17 GMT   |   Update On 2018-08-26 06:17 GMT
முக்கொம்பு அணை உடைந்து விழுந்தது ஏன்? என்று டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDinakaran #ADMK #Cauvery #MukkombuDam

பெரம்பலூர்:

பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களுக்கு கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கே: அ.தி.மு.க. பற்றி பேசுவதற்கு தகுதியில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளாரே?

ப: அ.தி.மு.க.வில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர். போட்டி தி.மு.க.வில் இருந்து கொண்டு அம்மாவின் போட்டோவை எரித்தவருக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. யாருக்கு அருகதை உள்ளது என்பதை தேர்தலின் போது மக்கள் நிரூபிப்பார்கள்.

கே :அ.தி.மு.க.வை பலப்படுத்த தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஓ.பி.எஸ்.கூறியுள்ளாரே?


ப :மீண்டும் தர்மயுத்தம் நடத்தியது போல ஏதாவது செய்யப்போகிறாரா?, போகாத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

கே: முக்கொம்பு அணை உடைப்பு பற்றி முதல்வர் கூறியது பற்றி?

ப:அணைகளை முறையாக பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வெறும் பெயிண்ட் மட்டும் அடித்து விட்டு அதற்கு உண்டான நிதியை சுவாகா செய்ததால்தான் முக்கொம்பு மேலணை இடிந்து விழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகிய இருவரில் சிறந்த தலைமையை முடிவு செய்ய வேண்டியது தி.மு.க. தொண்டர்கள்தான் என்றார்.

Tags:    

Similar News