செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் டிஸ்மிஸ்

Published On 2018-08-24 03:29 GMT   |   Update On 2018-08-24 03:29 GMT
ஐஏஎஸ் தேர்வில் புளூ டூத் வைத்து காப்பியடித்து கைது செய்யப்பட்ட தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #SafeersKarim
சென்னை:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஎஸ், ஐஏஎஸ் பதவிகளுக்காக நடந்த தேர்வில் புளூ டூத் வைத்து காப்பி அடித்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் கையும் களவுமாக பிடிபட்டார். சபீர் கரீம் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஐபிஎஸ் அதிகாரியான சபீர் கரீம் நாங்குநேரி சப்டிவிஷனில் ஏஎஸ்பியாக பணியாற்றி வந்தார். கேரளாவில் அவரது பெயரில் அவருடைய மனைவி ஐஏஎஸ் பயிற்சி அகாடமி நடத்துகிறார்.



காப்பி அடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்சி, அவரது நண்பரும் தனியார் ஐஏஎஸ் அகாடமி இயக்குனருமான ராம்பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சபீர் கரீமிடமிருந்து தேர்வு அறைக்குள் மறைத்துக் கொண்டுசென்ற 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  சபீர் கபீர் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சபீர்கரீம் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், யுபிஎஸ்சி தேர்வாணைய  விசாரணைக்கு பின், சபீர்கரீம் ஐபிஎஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் வரலாற்றில் பதவிநீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை ஆகும். #SafeersKarim
Tags:    

Similar News