செய்திகள்

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கேரளாவுக்கு ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள்

Published On 2018-08-23 09:22 GMT   |   Update On 2018-08-23 09:22 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. #KeralaFloodRelief
தூத்துக்குடி:

கேரள மாநிலத்தில் கடந்த வாரங்களில் பெய்த கனமழைக்கு சுமார் 380 பேர் பலியானார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சார்பில் கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காய்கறிகள், எண்ணை, தேங்காய், அரிசி மற்றும் உணவு பொருட்கள், பிஸ்கட்கள், பழங்கள், சுத்தம் செய்வதற்கு பயன்படும் பொருட்கள், மீட்புக்கருவிகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இவை அனைத்தும் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு ஒரு கண்டெய்னர் லாரியில் நிரப்பப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தை ஸ்டெர்லைட் நிறுவன பொது மேலாளர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இவை கேரளா பத்தனம் திட்டா பகுதி தாசில்தாரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. #KeralaFloodRelief
Tags:    

Similar News