செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எழுதிய நூல் வெளியீட்டு விழா- திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்

Published On 2018-08-22 17:48 GMT   |   Update On 2018-08-22 17:48 GMT
தஞ்சையில் 25-ந்தேதி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். #thirunavukkarasar

பேராவூரணி:

தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் க.மாணிக்கவாசகம். 1979-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், 2012-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

காவல் துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள இவர், கடந்த 2010-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சரின் வீர, தீர செயலுக்காக பதக்கம் பெற்றவர். காவல் துறையில் பணிபுரிந்த காலத்தில் தான் சந்திந்த பல நிகழ்வுகளை தொகுத்து 55 சிறு கதைகளாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா 25-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சையில் உள்ள தீர்க்க சுமங்கலி மகாலில் நடைபெற உள்ளது.

விழாவுக்கு அழகப்பா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பெ.சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்குகிறார். ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு அரு.உலகநாதன் வரவேற்கிறார். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். அதை சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து பெற்றுக்கொண்டு பேசுகிறார். நூல் ஆசிரியர் க.மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றுகிறார்.

இதில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி க.கணேசன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அ.கலியமூர்த்தி, வீ.சித்தண்ணன், சி.ராஜமாணிக்கம், பெ.மாடசாமி மற்றும் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். விழா ஏற்பாடுகளை ஆவணம் க.அடைக்கலம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். #thirunavukkarasar

Tags:    

Similar News