செய்திகள்

ராஜபாளையத்தில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ, வேன் பறிமுதல்

Published On 2018-08-22 12:18 GMT   |   Update On 2018-08-22 12:18 GMT
ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி அந்த ஆட்டோ, வேனை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் விதிகளை மீறுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு புகார் வந்தது.

இதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

காந்தி சிலை, ரெயில்வே பீடர் சாலை மற்றும் மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும், பள்ளி கல்லூரி பேருந்துகள், ஆட்டோக்கள், தனியார் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் சோதனை நடைபெற்றது.

50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் நடைபெற்ற சோதனையில், தகுதி சான்று இல்லாமல் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ மற்றும் தனியார் சுற்றுலா வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் அளவுக்கு அதிகமாக பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற 6 ஆட்டோக்கள் மற்றும் புகை சான்று, முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் விதிகளை மீறி இயக்கிய 7 சுற்றுலா வாகனங்கள் மற்றும் வேன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News