செய்திகள்

விருதுநகரில் சுதந்திர தினம் கோலாகலம்- 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

Published On 2018-08-15 14:38 GMT   |   Update On 2018-08-15 14:38 GMT
சுதந்திர தின விழாவில் 106 பயனாளிகளுக்கு ரூ. 78 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். #IndependenceDayIndia
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதன் முறையாக சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் தொடங்கி கடந்த 33 ஆண்டுகளாக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வந்த சுதந்திர தின விழா இந்த ஆண்டு தான் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதையொட்டி விழா திடல் பிரமாண்ட முறையில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் சிவஞானம் தேசியக்கொடி ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.  தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். 142 அரசு அலுவலர் களுக்கு நற்சான்றிதழ் களையும், வெம்பக் கோட்டை தனிபிரிவு சிறப்பு  சப்-இன்ஸ்பெக்டர்  காளிராஜ் உள்பட 70 காவல் துறையினரின் சிறப்பு சேவைகளை பாராட்டியும், தொடர்ந்து சிறப்பான சேவை செய்யவும் சான் றிதழ்களையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

விழாவில் பல்வேறு அரசுத்துறைகளின் கீழ் 106 பயனாளிகளுக்கு ரூ. 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. 
தொடர்ந்து 14 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன. 
முன்னதாக விழாவிற்கு வந்த கலெக்டர் சிவ ஞானத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன்,மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன் வரவேற் றனர்.

மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் சுதந்திர தினவிழா இன்று விமரிசையாக கொண் டாடப்பட்டது. நகராட்சி, பஞ்சாயத்து அலுவல கங்கள், கோர்ட்டு உள் ளிட்ட அரசுத்துறை அலுவல கங்களிலும் கொடியேற்றப்பட்டது. விருதுநகர் தேசப்பந்து திடலில் உள்ள தியாகிகள் நினைவுத்தூணிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. கே.வி.எஸ். பள்ளிகளில் பள்ளி செயலாளர் மதன்மோகன் தலைமையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. #IndependenceDayIndia 
Tags:    

Similar News