செய்திகள்

கே.கே.நகர் பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி

Published On 2018-08-12 16:32 GMT   |   Update On 2018-08-12 16:32 GMT
கே.கே.நகர் பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
கே.கே.நகர்:

திருச்சி மாநகர பகுதியில் முக்கியமான பகுதியான கே.கே.நகரில் காவல்துறை உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள், காவலர் குடியிருப்புகள் உள்ளன.  இந்த பகுதி அய்யப்பன் நகர் முதல் இச்சிகாமாலைபட்டி வரை மிக அகன்ற பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் 2  காவல் உதவி நிலையங்கள் மட்டுமே உள்ளது. அங்கு போதுமான காவலர்கள் இல்லாத காரணத்தினால் அய்யப்பன் நகர், எல். ஐ .சி .காலனி, கே.கே.நகர் போன்ற பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 

நேற்று மாலை அய்யப்பன் நகர், ஆனந்த நகர்பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு அதே பகுதி ராமலிங்கர் தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற பெல் ஊழியரான ரவிச்சந்திரனின் மனைவி வளர்மதி நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால்  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் , வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறித்து சென்றனர்.
 
இது குறித்து கே.கே.நகர் குற்றப்பிரிவுபோலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கே.கே.நகர் பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது அப்பகுதி பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது. எனவே கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News