செய்திகள்

கோவையில் கடன் பிரச்சினையால் குடும்பத்துடன் வி‌ஷம் குடித்த தொழில் அதிபர்- மனைவி பலி

Published On 2018-08-10 08:42 GMT   |   Update On 2018-08-10 08:42 GMT
கோவையில் கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதில் மனைவி பலியானார். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை:

கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (43). கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சசிகலா (37). இவர்களுக்கு சினேகா (16), ஹேமவர்னா (15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சினேகா 12-ம் வகுப்பும், ஹேமவர்னா 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

ஜானகிராமனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பலரிடம் வாங்கி உள்ளார். அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்துள்ளார்.

குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த ஜானகிராமன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்தார். பின்னர் தானும் வி‌ஷம் குடித்தார்.

இதில் 4 பேரும் படுக்கையில் மயங்கி விழுந்தனர். அவர்கள் வாயில் இருந்து நுரை தள்ளியபடி இருந்தது. ஜானகி ராமன் வீட்டினர் வெகு நேரமாக வெளியில் வராததால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டினர் அங்கு வந்து பார்த்தனர்.

அப்போது படுக்கை அறையில் 4 பேரும் மயங்கி கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு குனியமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி சசிகலா பரிதாபமாக இறந்தார்.

ஜானகி ராமன் மற்றும் அவரது மகள்கள் சினேகா, ஹேமவர்னா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடன் பிரச்சினையால் தொழில் அதிபர் குடும்பத்துடன் வி‌ஷம் குடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News