கல்விராயன்பேட்டை கோனாவாரி ஏரியை தூர்வார வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் மனு
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே கல்விராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கல்விராயன்பேட்டையில் உள்ள கல்லணை கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகளான நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம்.மேலும் கோனாவாரி ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் இந்த ஏரியை உடனடியாக பார்வையிட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். #Tamilnews