செய்திகள்

ஆடிக்கிருத்திகை - திருத்தணிக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2018-08-03 10:03 GMT   |   Update On 2018-08-03 10:03 GMT
வேலூரில் இருந்து திருத்தணிக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.
வேலூர்:

முருகன், கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா வரும் 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுவார்கள். திருத்தணி கோவிலுக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் இன்றிலிருந்தே அதிகளவில் காவடி எடுத்து செல்கின்றனர்.

இதற்காக வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 400 பஸ்கள் இயக்கபடுகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு (வெள்ளி, சனி, ஞாயிறு) வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 516 டிரிப் (நடை), பழைய பஸ் நிலையத்தில் இருந்து 279 டிரிப், ஆற்காட்டில் இருந்து 119 டிரிப், பேர்ணாம்பட்டில் இருந்து 42 டிரிப், திருப்பத் தூரில் இருந்து 158 டிரிப் என மொத்தம் 1,310 டிரிப்களாக சிறப்பு பஸ்கள் திருத்தணிக்கு இயக்கப்படுகிறது. அதே நேரம் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானால் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News