செய்திகள்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

Published On 2018-07-30 07:20 GMT   |   Update On 2018-07-30 07:20 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம், புதுச்சத்திரம், அம்பிளிக்கை, கீரனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த தக்காளிகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து இங்கிருந்து வெளியூர்களுக்கும் கேரளா உள்பட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது.

கேரளாவில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தால் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அதிக அளவு தக்காளி தேக்கமடைந்துள்ளது. கடந்த வாரம் 14 கிலோ கொண்ட பெட்டி தக்காளி ரூ.240 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ரூ.100 முதல் ரூ.130 வரையே விலை கேட்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.

எடுப்பு கூலிக்கு கூட பணம் கிடைக்காததால் பலர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். தக்காளி விலை மேலும் குறையக்கூடும் என்பதால் வியாபாரிகள் செய்வது அறியாமல் உள்ளனர்.

சின்ன வெங்காயமும் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News