செய்திகள்

குரங்கணி வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

Published On 2018-07-29 11:18 GMT   |   Update On 2018-07-29 11:18 GMT
குரங்கணி வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:

போடி குரங்கணி மலைப்பகுதி கொழுக்குமலை ஒற்றைமரம் அருகே கடந்த மார்ச் 11-ந்தேதி திடீரென காட்டுத்தீ பற்றியது. இதில் மலையேற்றபயிற்சிக்கு சென்ற 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்யாமிஷ்ரா விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தார்.

கடந்த 3 மாதங்களாக போடி வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் காட்டுத்தீ ஏற்படாமல் இருந்தது.

தற்போது கழுகுமலை வனப்பகுதி கழுதைப்பாதையில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென பரவிய தீயால் அரியவகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், கடந்த 3 மாதங்களாகவே வனப்பகுதியில் பச்சைப்புற்கள் ஈரப்பதத்துடன் இருந்தது. மேலும் மழை பெய்து வருவதால் இயற்கையாக தீப்பற்ற வாய்ப்பில்லை. மர்மகும்பல் இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். வனப்பகுதியில் தீ வைக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News