செய்திகள்

கருப்பூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

Published On 2018-07-23 22:18 IST   |   Update On 2018-07-23 22:18:00 IST
கருப்பூர் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மதன் குமார் பரிதாபமாக இறந்தான். #WallCollapse
கருப்பூர்:

கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் மதன்குமார் (வயது 13). இவன் அங்கு உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் குடித்தெரு பகுதியில் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டின் சுற்று சுவர் திடீரென்று இடிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் இடிபாட்டில் சிக்கிய அவன் உயிருக்கு போராடினான். இதை பார்த்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவனை மீட்டு கருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற சிறுவனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மதன்குமார் பரிதாபமாக இறந்தான். இது குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News