செய்திகள்
விடுமுறை விடப்பட்டதால் பள்ளிகூடத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற மாணவிகள்

நெல்லையில் தேனீக்கள் கொட்டி 30 மாணவ-மாணவிகள் காயம்- 2 பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2018-07-23 11:30 GMT   |   Update On 2018-07-23 11:30 GMT
நெல்லை டவுணில் தேனீக்களில் கொட்டி 30 மாணவ- மாணவிகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நெல்லை:

நெல்லை டவுண் தெற்கு மவுண்ட்ரோட்டில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் எதிரே ஜவகர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ராட்சத மரத்தின் மீது 3 அடி உயரத்தில் பெரிய தேனீ கூடு இருந்தது.

இந்நிலையில் இன்று வீசிய பலத்த காற்றில் அந்த தேனீ கூடு கீழே விழுந்தது. இதையடுத்து இதில் இருந்து ஏராளமான தேனீக்கள் வெளியேறி அருகில் உள்ள பள்ளிகளில் புகுந்தது. இதில் கல்லணை பள்ளியில் இருந்த சுமார் 25 மாணவிகளையும், ஆசிரியைகளையும் கொட்டியது. இதனால் அலறியடித்து கொண்டு மாணவிகள் வெளியேறினர்.

இதையடுத்து அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனீக்கள் அருகில் உள்ள ஜவகர் பள்ளி மாணவர்கள் 5 பேரையும் தாக்கியது. மேலும் அவ்வழியாக வாகனத்தில் மற்றும் நடந்து சென்றவர்களையும் தாக்கியது. இதையறிந்த பெற்றோர்கள் ஏராளமானவர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து கல்லணை மற்றும் ஜவகர் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் டவுண் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News