செய்திகள்

ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி பந்தயம்

Published On 2018-07-22 19:16 IST   |   Update On 2018-07-22 19:16:00 IST
ஆவுடையார் கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் செல்விநாயகர், மஞ்சனத்தி அய்யனார்கோவில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.
அறந்தாங்கி:

ஆவுடையார் கோவில் அருகே புண்ணியவயல் கிராமத்தில் செல்விநாயகர், மஞ்சனத்தி அய்யனார்கோவில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரிய மாட்டில் முதல்பரிசை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.பி. அன்பு அம்பலம் மாடும், இரண்டாம்பரிசை தினையாகுடி ஆர்.கே.சிவா மாடும், மூன்றாம்பரிசை உடப்பன்பட்டி பூமிமாடும் தட்டிச்சென்றன. 

நடுமாட்டில் முதல்பரிசை புண்ணியவயல் மண்தின்னிகாளி மாடும், இரண்டாம் பரிசை செல்வ னேந்தல் சுந்தர்ராஜன்சேர்வை மாடும், மூன்றாம்பரிசை பொன் பேத்தி மருதுபாண்டிய  வெள்ளாளத் தேவர் மாடும்தட்டிச் சென்றன, கரிச்சான் மாட்டில் 38 வண்டிகள் சேர்ந்ததால் ஒரு செட்டில் விடமுடியாது  என்பதால் அதை இரண்டு செட்டாக விடப்பட்டது . அதில் முதல்செட்டில் முதல்பரிசை பொய்யாதநல்லூர் அப்பாஸ்ராவுத்தர் மாடும், இரண்டாம் பரிசை கடம்பங்குடி காமாட்சி அம்மன் மாடும்,  மூன்றாம் பரிசை பொன் பேத்தி மருதுபாண்டிய வெள்ளாளத்தேவர் மாடும் தட்டிச்சென்றன. 

இரண்டாவது செட்டில் முதல் பரிசை வெள்ளூர் அய்யப்பன் மாடும், இரண்டாம் பரிசை கருப்பூர் வீரையா சேர்வை மாடும், மூன்றாம் பரிசை கல்லாபேட்டை மண்டையம்மன் மாடும் தட்டிச் சென்றன. விழா ஏற்பாடுகளை புண்ணிய வயல் கிராமத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News