செய்திகள்

நவல்பட்டு ஊராட்சியில் சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் எம்எல்ஏ மனு

Published On 2018-07-21 20:48 IST   |   Update On 2018-07-21 20:48:00 IST
நவல்பட்டு ஊராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்எல்ஏ மனு கொடுத்துள்ளார்.
திருச்சி:

திருச்சி நவல்பட்டு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், அப்பகுதியில் இருந்து உய்யகொண்டான் கரை வழியாக திருவெறும்பூர் வரை தினசரி வந்து செல்வதற்கு பயன்படுத்தி வரும் சாலை, மிகவும் பழுதடைந்து நிலையில் இருந்து வந்தது. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். 

இதையடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம்  கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , கலெக்டர் ராசாமணியை சந்தித்து மனு கொடுத்தார். 

அதில் பொதுமக்களின் அடிப்படை தேவையான சாலை வசதியை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதற்காக  கலெக்டருக்கு அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News