செய்திகள்

காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெண்ணை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-07-20 15:19 IST   |   Update On 2018-07-20 15:19:00 IST
சாலிகிராமம் அருகே காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பெண்ணை கொன்ற வாலிபருக்கு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
போரூர்:

சென்னை, சாலிகிராமம் முனுசாமி தெருவில் வசித்து வந்தவர் ரமா (வயது 40). கடந்த 2009-ம் ஆண்டு இவரது வீட்டின் அருகே கோவில்பட்டியை அடுத்த மேலநாலந்தனம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (20) தங்கி கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது ரமா வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற தோழி ஒருவரது மகளான பள்ளி மாணவியை செந்தில்குமார் காதலித்து தொல்லை கொடுத்தார். இதனை ரமா கண்டித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ரமாவை கழுத்தை அறுத்து கொன்றார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றவாளி செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் புழல் ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News