தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாது என பேசிய சீமான் - உண்மை என்ன?
- உலகிலேயே தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் தான் நிழல் கீழே விழாது
- சீமான் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானது
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த 10-ந்தேதி பராசக்தி படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில், பராசக்கதி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார்.
படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது. மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை" என்று விமர்சித்தார்.
மேலும், பேசிய சீமான், "உலகிலேயே தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் தான் நிழல் கீழே விழாது என்று தெரிவித்தார்.
சீமான் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாக அவர் பேசிய தவறு என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
உண்மையில், தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் காலையில் மேற்கிலும் மாலையில் கிழக்கிலும் கீழ் விழும் என்று நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.