செய்திகள்

வி‌ஷ வாயு தாக்கி சென்னை என்ஜினீயர் உள்பட 3 பேர் பலி

Published On 2018-07-12 11:33 IST   |   Update On 2018-07-12 11:33:00 IST
கர்நாடக மாநிலம் ஆரோஹள்ளி தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த சரவணன் என்ற என்ஜினீயர் உள்பட 3 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
சென்னை:

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா ஆரோஹள்ளி தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 4 பேர் பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் வி‌ஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.

அவர்கள் கதி என்ன? என்பதை பார்க்க சென்னை பெரம்பூரை சேர்ந்த சரவணன் என்ற என்ஜினீயர் பாய்லர் தொட்டிக்குள் இறங்கினார். அவரும் மயங்கி விழுந்தார். 4 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சென்னை என்ஜினீயர் சரவணன், கோலார் மாவட்டம் முள்பாகலை சேர்ந்த லோகேஷ், ராமநகர் மாவட்டம் கொட்டிகேஹள்ளியை சேர்ந்த மகேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். இன்னொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News