என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Engineer Killed"
கர்நாடக மாநிலம் ஆரோஹள்ளி தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பெரம்பூரை சேர்ந்த சரவணன் என்ற என்ஜினீயர் உள்பட 3 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
சென்னை:
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா ஆரோஹள்ளி தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 4 பேர் பாய்லரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
அவர்கள் கதி என்ன? என்பதை பார்க்க சென்னை பெரம்பூரை சேர்ந்த சரவணன் என்ற என்ஜினீயர் பாய்லர் தொட்டிக்குள் இறங்கினார். அவரும் மயங்கி விழுந்தார். 4 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சென்னை என்ஜினீயர் சரவணன், கோலார் மாவட்டம் முள்பாகலை சேர்ந்த லோகேஷ், ராமநகர் மாவட்டம் கொட்டிகேஹள்ளியை சேர்ந்த மகேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். இன்னொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.