செய்திகள்

அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்ட்ராய்டு போன் வழங்க வேண்டும்- ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2018-07-06 17:41 IST   |   Update On 2018-07-06 17:41:00 IST
அனைத்து பள்ளிகளுக்கும் நல்ல தரமான ஆண்ட்ராய்டு போன் வழங்க வேண்டும் என ஆசிரியர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர்:

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தரகம்பட்டியில் நடந்தது. மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ஜான்சன் வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட துணை தலைவர் பிச்சை ஆரோக்கியம், பொருளாளர் கனகராஜ், சகிலா மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இடைநிலை ஆசிரியர் கவுன்சிலிங்கில் அனைத்து மாவட்ட காலப்பணியிடங்களையும் காண்பித்து நடத்தாமல் விட்டதை கண்டிப்பது,

தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் கியூ.ஆர் எனப்படும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியுள்ளதால் அனைத்து பள்ளிகளுக்கும் நல்ல தரமான ஆண்ட்ராய்டு போன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
Tags:    

Similar News