செய்திகள்

நேபாளத்தில் பலியான தலைமை ஆசிரியர் உடலுக்கு சொந்த ஊரில் அஞ்சலி

Published On 2018-07-06 12:03 GMT   |   Update On 2018-07-06 12:03 GMT
நேபாளத்தில் பலியான தலைமை ஆசிரியர் ராமச்சந்திரனின் உடலுக்கு ஆண்டிப்பட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் (வயது 69). இவரது மனைவி நாகரத்தினம் (67). இவர்கள் இருவர் உள்பட அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றனர்.

நேபாளம் வழியாக கைலாய மலைக்கு சென்ற போது மோசமான வானிலை காரணமாக ராமச்சந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மகன் வெங்கடேஷ் நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராமச்சந்திரன் உடலை பெறுவதற்காக அவர்கள் 2 பேரும் நேபாள தலைநகர் காட்மாண்டுக்கு சென்றனர்.

அங்கு ராமச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு மகன் வெங்கடேசன் நரசிம்மன், மகள் ஜெயஸ்ரீபத்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் காட்மாண்டுவில் இருந்து நேற்று மாலை ராமச்சந்திரனின் உடல் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு பகல் 12.30 மணியளவில் உறவினர்கள் கொண்டு வந்தனர்.

அவரது வீட்டு முன்பு ராமச்சந்திரன் உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் கிராம மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்படுகிறது. #tamilnews
Tags:    

Similar News