செய்திகள்
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஜீவானந்தம் மனைவி அலமேலு. இவரது மகளுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன், அன்புசெல்வம் ஆகியோர் ரூ.5 லட்சம் பெற்றனர்.
வாக்குறுதி அளித்தபடி அவர்கள் வேலை வாங்கித்தர வில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித்தரவில்லை. இருவரும் கொடுத்த காசோலையும் பணம் இல்லாமல் வங்கியில் இருந்து திரும்பி விட்டது.
இது குறித்து அலமேலு கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.