'தலைவர் தம்பி தலைமையில்' வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு
- இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.
இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. இப்படத்தி 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.